நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இயக்குனர் கங்கை அமரனின் இளைய மகனாக வெங்கட்பிரபுவின் தம்பியாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்த நடிகர் பிரேம்ஜி. தனது அண்ணன் இயக்கிய சென்னை-28 படம் மூலமாக அறிமுகமானவர். பெரும்பாலும் அண்ணன் படங்களிலேயே அடுத்தடுத்து தொடர்ந்து நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இதுதவிர வெளியிலும் சில படங்களில் காமெடி நடிகராகவும் சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் செலக்டிவ் ஆக படங்களை தேர்வு செய்து பணியாற்றி வருகிறார். தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து வெங்கட்பிரபு இயக்கி வரும் கஸ்டடி என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரேம்ஜி.
இந்த நிலையில் தற்போது கோட் சூட் அணிந்து தான் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் பிரேம்ஜி. இதற்கு முன்பு வெளியான படங்களில் அவரை பார்த்ததற்கும் இப்போது இந்தப் புகைப்படத்தில் பார்ப்பதற்கும் ஆளே ஸ்டைலாக காட்சியளிக்கிறார் பிரேம்ஜி. இது தற்போது அவர் நடித்துவரும் கஸ்டடி படத்தில் அவருக்கான கெட்டப்பா என்றால், இல்லை சும்மா ஒரு டிரை என்று கேப்சன் கொடுத்திருக்கிறார் பிரேம்ஜி.