நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்த 'லவ் டுடே' படம் இம்மாதத் துவக்கத்தில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. சுமார் 65 கோடி வரை வசூலித்துள்ள இந்தப் படத்தை 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு தெலுங்கில் வெளியிடுகிறார்.
நாளை நவம்பர் 25ம் தேதி ஆந்திரா, தெலங்கானாவில் இப்படம் சுமார் 300 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டப்பிங் உரிமை 3 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இளைஞர்களைக் கவரும் கதை என்பதாலும், புதுமுக நாயகன் நடித்துள்ளதாலும் தெலுங்கிலும் இப்படத்தை நேரடிப் படம் போல ரசிகர்கள் ரசிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். சத்யராஜ், ராதிகா என தெலுங்கு நடிகர்களுக்கும் தெரிந்த முகங்கள் படத்தில் உள்ளதும் படத்திற்கு பிளஸ் பாயின்ட்.
இப்படத்தின் தெலுங்கு டிரைலருக்கு 16 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது. அதுவே ஆச்சரியமான விஷயம்தான். எனவே, தெலுங்கிலும் இப்படம் லாபத்தைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.