நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வெற்றிமாறன் இயக்கத்தில் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' படங்களை பைஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் எஸ்.கதிரேசன். இந்நிலையில் இந்த கூட்டணியில் அதிகாரம் படம் தயாராவதாக அறிவிக்கப்பட்டது. ராகவா லாரன்ஸ் நடிக்க, துரை செந்தில் குமார் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படம் துவங்கவில்லை.
தயாரிப்பாளர் கதிரேசன், ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். வேறு சில படங்களை தயாரிக்கிறார். வெற்றி மாறன் விடுதலை, வாடிவாசல் படங்களில் பிசியாக இருக்கிறார். துரை செந்தில்குமார் சமீபத்தில் நயன்தாராவின் 81வது படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிகாரம் படம் கைவிடப்பட்டு விட்டதாக தகவல் பரவியது. இதனை தயாரிப்பாளர் கதிரேசன் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “அதிகாரம் கைவிடப்பட்டதாக பரவும் வதந்திகளைக் நாங்கள் கவனித்தோம் அது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அதிகாரம் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் மற்றும் படப்பிடிப்புத் நடத்த திட்டங்கள் சுமூகமாக நடந்து வருகிறது என நாங்கள் உறுதியாக இதை அறிவிக்கிறோம்”என்று தெரிவித்துள்ளார். மேலும் ஓட்டல் அறையில் கதை விவாதத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.