500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
உலகிலேயே அதிக வசூல் சாதனை படைத்து முதலிடத்தில் இருக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற டிசம்பர் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. வெளியான படத்தின் டீசரும், டிரைலரும் மிரட்டலாக அமைந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் படத்தின் முன்பதிவை இந்திய தியேட்டர்கள் துவங்கி உள்ளன. அவதார் படத்தை பார்த்து ஆச்சர்யப்படுவதற்கு முன்பு, அதன் டிக்கெட் கட்டணத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஒரு சில தனியார் மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் ஆன் லைன் முன்பதிவை தொடங்கி இருக்கிறது. அதில் கட்டணம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஐமேக்ஸ் மாதிரியான அகண்ட திரையில் உள்ள தியேட்டர்களில் இந்த கட்டணம் ஆயிரத்திற்கு மேல் வசூலிக்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முந்தைய முன்பதிவுக்கே இவ்வளவு கட்டணம் என்றால் படம் வெளியாகும் நேரத்தில் எப்படி இருக்கும் என்பதே ரசிகர்களின் கவலையாக இருக்கிறது.