500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
மலையாளத் திரையுலகில் குறுகிய காலகட்டத்திலேயே வித்தியாசமான கதைக்களங்களில், வித்தியாசமான மனிதர்களின் வாழ்க்கை முறைகளை படமாக எடுத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி. இவர் இயக்கிய அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இவர் தற்போது மம்முட்டி நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் மலையாளத்தில் வெளியாகும் அதே சமயத்தில் தமிழிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தப் படம் முழுவதுமே தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ளதுடன் முக்கால்வாசி படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.