நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் சாரதி சதீஷ் தயாரிப்பில் சாய் கிருஷ்ணா இயக்கத்தில் 'காபி' என்ற படத்தில் நடித்துள்ளார் இனியா.ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோர்களை இழந்து விடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு சமாளித்து, தனது கனவை நனவாக்க முயற்சிக்கிறார். தன் தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறார். இனி சுபிட்சமாக வாழலாம், கஷ்டங்கள் தீர்ந்து விடும் காலம் வந்து விட்டது என்று நம்பிய வேளையில், எதிர்பாராத அதிர்ச்சியான சம்பவம் நடக்கிறது. அதை அவர் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்? என்பதே கதை. இதில் இனியா முதன் முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் கலர்ஸ் தமிழ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. வருகிற 27ம் தேதி ஞாயிற்று கிழமை மதியம் 2 மணிக்கு ஒளிப்பாகிறது.