நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள படம் வாரிசு. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகிறது.
இதே நாளில் சிரஞ்சீவி நடித்துள்ள 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணா நடித்துள்ள 'வீர சிம்ஹா ரெட்டி' உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது. இதனால் சங்கராந்தி பண்டிகைக்கு நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் சங்க முடிவால் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் ஆந்திராவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பெரிய ஹீரோக்கள் மவுனமாக இருக்கும் போது காமெடி நடிகர் கஞ்சா கருப்பு இது குறித்து பேசியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: நான் தெரியாம தான் கேக்குறேன். இங்க ஒரு படம் ஹிட்டானால் அந்த கதையைத் தெலுங்குக்கு வேண்டும் என்றால் கொடுக்கத்தான் போகிறோம். நீங்க ஏன் 'வாரிசு' படத்திற்கு கொட்டகை (தியேட்டர்) இல்லை என சொல்கிறீர்கள்? உங்க படம் மட்டும் 'பாகுபலி' தொடங்கி பரதேசி புலி வரை இங்க வந்திருக்கு. உங்க படம் மட்டும் தமிழ்நாட்டில் ஓடி பெரிய காசு பாக்கலாம். எங்க படம் அங்க ஓடக் கூடாதா? உங்க படம் வரும்போது ஸ்டே போட்டால் விடுவீங்களா? மரியாதையா 'வாரிசு' படத்தை ஓட்டுங்க, அப்படி ஓட்டுனாதான் எங்களுக்கும் பெருமை, உங்களுக்கும் பெருமை.
இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.