குட் பேட் அக்லி ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? | யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! |
மேற்கு வங்காளத்தில் உள்ள பெர்ஹாம்பூரில் பிறந்த 24 வயதான பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா. இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த நவம்பர் 1ம் தேதி ஜந்த்ரிலா சர்மாவுக்கு மூளை சாவு ஏற்பட்டது. அவரது மண்டை ஓட்டுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், இடது முன்பக்க டெம்போரோபரியட்டல் டி-கம்ப்ரசிவ் கிரானியோட்டமி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவருக்கு அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நினைவு திரும்பாமலே இருந்த நிலையில் இன்று (நவ.,20) அவர் உயிரிழந்தார்.
துவக்கத்தில் தொலைக்காட்சியில் அறிமுகமான ஜந்த்ரிலா சர்மா, தொடர்ந்து, மகாபீத் தாராபீத், ஜிபோன் ஜோதி மற்றும் ஜியோன் கதி போன்ற நிகழ்ச்சிகளில் நடித்தார். இது தவிர அமி திதி நம்பர் 1 மற்றும் லவ் கஃபே போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.