யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
பிரபல கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் முதன்முறையாக தற்போது தமிழிலும் தனது கவனத்தை திருப்பியுள்ளார். அந்தவகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவராஜ்குமார், தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் சிவராஜ்குமார். இது குறித்த புகைப்படங்களும் செய்திகளும் ஏற்கனவே வெளியாகின.
இந்த நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சிவராஜ்குமாரை சந்தித்து அவர் தமிழில் நடிப்பதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளன. இந்த நிகழ்வின்போது ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகர் யோகிபாபுவும் உடன் இருந்தார்.
இந்த படத்தில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் அதற்காகத்தான் இந்த படப்பிடிப்பிற்கு வந்து இருக்கிறாரோ என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் வந்தது நடிகர் சிவராஜ்குமாரை பார்ப்பதற்காக தான். காரணம் கடந்த 2015ல் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த வஜ்ரகயா என்கிற படத்தில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அப்போதிருந்தே அவருடன் நல்ல நட்பில் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். கடந்த வருடம் சிவராஜ்குமாரின் தம்பி புனித் ராஜ்குமார் மரணத்திற்கு கூட பெங்களூரு சென்று அவரது சமாதியில் சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.