நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றுவதில் இந்த படங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு இடையே பலத்த போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இப்படியான நிலைகளில் விஜய்யின் வாரிசு படத்தையும் வெளிநாடுகளில் அதிகமான தியேட்டர்கள் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ள லைகா நிறுவனமும் வெளிநாடுகளில் அதிகப்படியான தியேட்டர்களில் துணிவு படத்தை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அதோடு விஜய், அஜித்தின் படங்கள் வெளிநாடுகளில் ஒரே நாளில் ரிலீசாக இருப்பதால் தமிழ்நாட்டை போலவே வெளிநாடுகளிலும் இந்த இரண்டு படங்களுக்கும் இடையே முக்கிய தியேட்டர்களை கைப்பற்றுவதில் போட்டி ஏற்பட்டுள்ளது.