மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பாலிவுட் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் கனடாவை சேர்ந்த சன்னி லியோன். தற்போது தமிழ் சினிமாவில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். தீ இவன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார்.
சினிமாவில் நடிப்பது தவிர மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வருகிறார். அதன்படி கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் நடனமாட ஒத்துக் கொண்டு 20 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் சன்னி லியோன். அந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கவில்லை. இதற்கு காரணம் சன்னி லியோன்தான் என்றும் அவர் வாங்கிய சம்பளத்தை திருப்பித் தரவில்லை என்றும் அவர் மீது கேரள உயர்நீதி மன்றத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தன் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லாததால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கால் தனக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் சன்னி லியோன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை சன்னி லியோன் மீது எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.