ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு | பிளாஷ்பேக்: 'சிட்டாடெல்' ஆனந்தன் சினிமாவின் 'விஜயபுரி வீரன்' | மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் |
சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்தவரான கால்பந்து வீராங்கனை பிரியா, காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், தவறான சிகிச்சை காரணமாக இறந்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதையடுத்து பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை தான் மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். அதோடு, கால்பந்தாட்ட வீராங்கணையின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இப்படியான நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிலவில், ‛‛என் கேம் என்னை விட்டுப் போகாது. கம் பேக் கொடுப்பேன். தங்கை பிரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப் போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துக்கள். அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை'' என்று பதிவிட்டு இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.