நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் 'தேவராட்டம்' படத்தில் நடித்தபோது காதலில் விழுந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்தக் காதல் வெளியில் தெரிந்ததும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் சாக்கில் காதலை அறிவித்தனர். வருகிற 28ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணம் நடக்க இருக்கிறது. இதில் அவர்களின் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், மஞ்சிமா மோகன் இன்ஸ்டாகிராமில் உள்ள தனது படங்கள் அனைத்தையும் நீக்கி உள்ளார். அவரும் கவுதம் கார்த்திக்கும் இணைந்திருக்கும் இரண்டு படங்களும், மஞ்சிமா பூனையை கையில் வைத்திருக்கும் ஒரு படமும் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அவர் நீக்கிய படங்களில் அவர் நடித்த முந்தைய படங்களின் காட்சிகள், மற்ற நடிகர், நடிகைளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்பிகள் இருந்தன.
திருமணத்திற்கு பிறகு அவர் திரைப்படம் மற்றும் சமூக வலைத்தளங்களில் முற்றிலும் விலக இருப்பதையே இது காட்டுகிறது என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இதற்கு பதலிளித்துள்ள மஞ்சிமா "இன்ஸ்டாகிராம் மக்களுடன் இணைந்திருப்பதற்கு ஏற்ற எளிய அழகான தளம். அது எந்த அளவிற்கு அழகானதோ, ஆபத்தானதோ என்று கவலையில்லை. என்னுடைய பழைய புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து தவிர்க்கிறேன். நான் மீண்டும் எல்லாவற்றையும் தொடங்குவேன்" என்கிறார் மஞ்சிமா.