100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
மலையாள திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் கோபி சுந்தர். தமிழில் தோழா, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோபி சுந்தர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பின்னணி பாடகி அம்ரிதா சுரேஷுடன் அதாவது நடிகர் பாலாவின் முன்னாள் மனைவியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தநிலையில் தற்போது ஒரே சமயத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 12 படங்களுக்கு இசையமைத்து வருவதாக கூறியுள்ளார் கோபி சுந்தர். ஆனால் இதில் ஒன்று கூட மலையாள படம் இல்லை.
சமீபத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் மலையாள படத்தில் இசை அமைப்பதில்லை என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த கோபி சுந்தர், “உங்களுக்கு நீங்கள் வாங்கும் சம்பளத்தை விட சிறப்பான சம்பளம் கொடுப்பதாக கூறி இன்னொரு இடத்திற்கு அழைத்தால் நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள் சகோதரரே..? அதைத்தான் நானும் எடுத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடிக்கு மிகப்பெரிய புகழை கொடுத்த கீதா கோவிந்தம் படத்திற்கு இசையமைத்தது இவர்தான்.. ஆனாலும் சம்பளம் காரணமாக மலையாள திரையுலகை விட்டு ஒதுங்கியுள்ளதாக இவர் கூறியது ரசிகர்களிடம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.