நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். இதற்கு முன்னதாக அவர் திரையுலகில் சில படங்களில் பணியாற்றி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் இன்னும் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். இவர் ஏற்கனவே சின்னத்திரை நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்துகொண்டு, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2012ல் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதைத் தொடர்ந்து சில்வியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட சாண்டிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் முதல் மனைவியான காஜல் பசுபதி சாண்டியின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுடன் சந்தித்து உரையாடியுள்ளார். மேலும் அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டு அவற்றை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அவர்களை சந்தித்தது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சாண்டியின் இரண்டாவது மனைவி சில்வியாவை டார்லிங் என குறிப்பிட்டு இருவரையும் வாழ்த்தியுள்ளார்.
காஜல் பசுபதியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான். அதேசமயம் சாண்டியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் விவாகரத்து செய்து இருந்தாலும் எந்த இடத்திலும் ஒருவருக்கு ஒருவர் குற்றம் குறை சொல்லி பேசியதில்லை. குறிப்பாக சாண்டியை எந்த இடத்திலும் காஜல் பசுபதி விட்டுக்கொடுத்து பேசியது இல்லை. இந்த நிலையில் அவர்கள் குடும்பத்தை நேரில் சந்தித்ததுடன் தனது மகிழ்ச்சியை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள காஜல் பசுபதியின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.