நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இப்படிப்பட்ட படங்களைத்தான் இவர் இயக்குவார் என ஒரு வட்டத்துக்குள் தன்னை அடைத்துக் கொள்ளாமல் மோகன்லால் நடித்த உதயநாணுதாரம், பிரித்விராஜ் நடித்த மும்பை போலீஸ், நிவின்பாலி நடித்த வரலாற்று படமான காயங்குளம் கொச்சுண்ணி மற்றும் மலையாளத்தில் மஞ்சு வாரியருக்கும், தமிழில் ஜோதிகாவுக்கும் வெற்றிகரமான மறு பிரவேசத்துக்கு வழிவகுத்த ஹவ் ஓல்ட் ஆர் யூ (தமிழில் 36 வயதினிலே) என விதவிதமான ஜானர்களில் படங்களை இவர் இயக்கி உள்ளார்.
இந்தநிலையில் மலையாளம், தமிழ் இரண்டு மொழிகளையும் தாண்டி முதன்முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். ஹிந்தியில் அவர் இயக்கும் படத்தில் பாலிவுட் நடிகர் சாகித் கபூர் கதாநாயகனாக நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தற்போது இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு அவரது ஆஸ்தான கதாசிரியர்களான பாபி-சஞ்சய் இரட்டையர் தான் கதை எழுதியுள்ளனர்.. பிரபல பாலிவுட் முன்னணி தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 16 முதல் துவங்குகிறது.