ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கு மொழியில் தயாராகி வரும் படம் "ரம்" (ரம்பா, ஊர்வசி, மேனகா என்பதின் சுருக்கம்). இதில் ரம்பாவாக த்ரிஷாவும், ஊர்வசியாக நிக்ஷா பட்டேலும், மேனகாவாக இஷா சாவ்லாவும் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்புகள் தற்போது மஸ்கட்டில் நடந்து வருகிறது.
இந்தப் படத்தில் மேனகாவாக நடிக்க முதலில் பூர்ணாதான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அதற்கு பிறகு படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான எம்.எஸ்.ராஜு கதையில் நிறைய மாற்றங்களைச் செய்ததுடன், நான்காவதாக ஷார்மியையும் படத்தில் இணைத்துள்ளார். அதோடு பூர்ணாவிடம் முதல் ஷெட்யூலுக்கே தொடர்ச்சியாக 22 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளார். இதனால் தன்னை வேண்டுமென்றே ஓரங்கட்டுவதாக கருதிய பூர்ணா படத்திலிருந்து விலகிக் கொண்டார். தற்போது பூர்ணா அர்ஜுனன் காதலி, தகராறு, ஜன்னலோரம், படம் பேசும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.