ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நடிகை சமந்தா கதாநாயகியாக நடித்துள்ள யசோதா திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். நேற்று படம் வெளியானது முதல் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பும் பாசிட்டிவான விமர்சனங்களும் வெளிவர ஆரம்பித்தன. இதனால் உற்சாகமான படத்தின் இயக்குனர்கள் தங்களது குழுவினர் சிலருடன் சமந்தாவின் வீட்டிற்கு நேரிலேயே சென்று இந்த வெற்றி தகவலை அவரிடம் கூறி தங்களது மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்த படத்திற்காக சமந்தா ஆக்சன் காட்சிகளில் நடித்தது உட்பட பலவிதமான கடின உழைப்பு கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல கடந்த சில நாட்களுக்கு முன்பு, தசை அழற்சி நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சிகிச்சை எடுத்து வருவதாகவும் தனது வேதனையையும் வெளிப்படுத்தியிருந்தார். இது அவரது ரசிகர்களிடம் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. பலரும் அவர் விரைவில் குணமாக ஆறுதல் கூறிவந்த நிலையில், அவர் நடித்துள்ள யசோதா படத்தின் வெற்றி, அவருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.