மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தெலுங்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய்சேதுபதி வில்லனாக நடித்த உப்பென்னா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. அந்த படத்தின் வெற்றியால் தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு தற்போது வேகமாக வளர்ந்து வருகிறார்.
தமிழில் பாலா டைரக்ஷனில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் வெங்கட்பிரபு முதன்முறையாக தமிழ், தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து இயக்கி வரும் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 40 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வெங்கட்பிரபுவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள கீர்த்தி ஷெட்டி அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து விலாவாரியாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் இதுவரை பார்த்ததிலேயே எப்போதும் புன்னகை ததும்பும் முகத்துடன் அரவணைக்கும் நபராக காணப்படும் ஒருவராக இயக்குனர் வெங்கட் பிரபுவை பார்க்கிறேன். நீங்கள் இப்படி இருப்பதற்காக உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். மேலும் உங்களுடன் இந்த படத்தில் இணைந்து நான் பணியாற்றப்போவதாக செய்திகள் வெளியானதும் உங்கள் படத்தில் நடித்த பணியாற்றிய பல பேர் நிச்சயமாக இந்த படம் உங்களுக்கு ஒரு ஜாலியான அனுபவமாக இருக்கும் என்றும் உற்சாகம் கொடுக்கும் என்றும் கூறினார்கள். அதனாலேயே உங்களுடன் இணைந்து பணிபுரியும் ஆர்வம் அதிகமானது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நான் கேள்விப்பட்டதை விட, எதிர்பார்த்ததைவிட அந்த கலகலப்பு இன்னும் அதிகமாகவே இருந்ததை உணர முடிந்தது. என்னுடைய இந்த பயணத்தில் இவ்வளவு கலகலப்பான அனுபவங்களை கொடுத்ததற்காக உங்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.