ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சுனில். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கில் பல முன்னணி கதாநாயகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் வந்த 'மரியாத ராமண்ணா' படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அந்தப் படம் தான் தமிழில் சந்தானம் நடிக்க 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. மேலும், 'அந்தால ராமுடு, பூலகங்காடு, தடாகா, ஜக்கண்ணா' உள்ளிட்ட சில படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கடந்தாண்டு பான் இந்தியா படமாக வெளிவந்து வெற்றி பெற்ற 'புஷ்பா' படத்தில் 'மங்களம் சீனு' என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்தும் மிரட்டியிருந்தார். அவர் தற்போது தமிழில் அடுத்தடுத்து இரண்டு முக்கிய படங்களில் நடிக்கும் அறிவிப்பு நேற்று வெளியானது.
ராஜு முருகன் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' படத்தில் சுனில் நடிக்க உள்ளதாக நேற்று அப்படத்தின் பூஜை முடிந்ததும் அறிவித்தார்கள். அதன்பின் நேற்று மாலையில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்திலும் சுனில் நடிக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். ஒரே நாளில் தமிழில் இரண்டு படங்களில் சுனில் நடிக்க உள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படங்கள் மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார் சுனில். முதல் படமாக அநேகமாக 'மாவீரன்' படம்தான் வெளியாகும் எனத் தெரிகிறது.