நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் தனுஷ் நடிக்கும் படம் வாத்தி. தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் நவம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது. வாத்தி படம் பற்றி கடந்த சில வாரங்களாக தனுஷ் எந்த ஒரு பதிவையும், சமூக வலைத்தளங்களில் பதிவிடாமல் தவிர்த்து வந்தார். அவருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பிரச்னை என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று வாத்தி படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு பற்றி தனுஷ் டுவீட் செய்துள்ளார். அதில், "வாத்தி, படத்தின் முதல் சிங்கிள் "வா வாத்தி" 10ம் தேதி வெளியாகிறது. ஜி வி பிரகாஷ் இசையில் எனது அபிமான ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன், " எனப் பதிவிட்டுள்ளார்.
தனுஷ் பாடல் எழுதியுள்ள இந்த முதல் சிங்கிள் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. சில வாரங்களாக இந்த படத்தை பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்த தனுஷ் இப்போது டுவீட் செய்திருப்பதால் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே எழுந்த பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது.