500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
கார்த்தி நடித்து இந்தாண்டு வெளியான 'விருமன், பொன்னியின் செல்வன், சர்தார்' ஆகிய படங்கள் ஹாட்ரிக் வெற்றியை பெற்றன. அடுத்து ராஜூ முருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். கார்த்தியின் 25வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ‛ஜப்பான்' என பெயரிட்டுள்ளனர். கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் முதல் முறையாக நடிக்கவுள்ளார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
'ஜப்பான்' படத்தின் பூஜை இன்று(நவ., 8) காலை சினிமா பிரபலங்கள் வாழ்த்த, சிறப்பான முறையில் நடைபெற்றது. விரைவில் தூத்துக்குடியில் முதல் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தின் முன் தயாரிப்பு, திட்டமிடல் பணிகளை நீண்ட நாட்களாக மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன். விரைவில் 'ஜப்பான்' படத்தின் முதல் பார்வையை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.