நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், சைப் அலிகான், கிர்த்தி சனோன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் மோஷன் கேப்சரிங் படம் 'ஆதி புருஷ்'. இப்படத்தின் வெளியீடு அடுத்த வருடம் 2023ம் ஆண்டு ஜுன் 16ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலில் படத்தை 2023 ஜனவரி 12ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள்.
ஆனால், படத்தின் டீசர் வெளியானதும் அது பற்றிய விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன. விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள் மிகச் சுமாராக இருக்கிறது என சாதாரண ரசிகர்களும் கமெண்ட் அடித்தார்கள். அதன்பின் மும்பை, ஐதராபாத் ஆகிய ஊர்களில் படத்தின் டீசரை 3டியில் திரையிட்டுக் காட்டி '3 டி'யில் பார்த்தால்தான் சிறப்பாக இருக்கும் என்றும் சமாளித்தார்கள்.
இந்நிலையில் முழு படத்தை படக்குழுவினர் திரையிட்டுப் பார்த்ததாகவும், அவர்களுக்கே படத்தின் விஎப்எக்ஸ் தரம் குறித்து சந்தேகம் எழுந்ததாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சினிமா பிரபலங்கள் சிலரும் 'இராமாயணக்' கதை என்பதால் படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகளை உலகத் தரத்திற்கு உருவாக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் பட வெளியீட்டைத் தள்ளி வைக்கும் அறிவிப்பை வெளியிட்டார்களாம். அதோடு படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.
ஆறு மாத கால தாமதம், கூடுதல் செலவு ஆகியவை படம் வெளியாகும் போது அதன் தரம் அனைத்தையும் மறக்கச் செய்யும் அளவிற்கு இருக்கும் என்று படக்குழு நம்பிக்கையுடன் இருக்கிறார்களாம்.