நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள 'யசோதா' படம் இந்த வாரம் நவம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக தனது உடல்நிலையையும் மீறி ஒரு நாளை ஒதுக்கியுள்ளார். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் சமந்தா தெரிவித்திருந்தார். அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தாலும் 'யசோதா' படத்திற்காக அவர் புரமோஷன் செய்கிறார்.
நேற்று இது குறித்து சில புகைப்படங்களைப் பதிவிட்டு, “எனது நல்ல நண்பர் ராஜ் சொல்வது போல, நாள் எப்படியிருந்தாலும், எவ்வளவு மோசமான விஷயங்கள் இருந்தாலும், “குளி, ஷேவ், வெளிப்படுத்து” என்பதே அவருடைய குறிக்கோள். 'யசோதா' படத்தின் புரமோஷனுக்காக, நான் ஒரு நாள் கடன் வாங்கியுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட்டுகளைப் பதிவிட்டுள்ளனர். அந்த ஒரு பதிவை மட்டும் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.
தாங்கள் நடிக்கும் படங்கள் வெளியானால் அது பற்றி எந்த ஒரு பேட்டியோ, அந்தப் படங்களின் விழாக்களிலோ கூட கலந்து கொள்ள மறுக்கும் சில ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கு மத்தியில் தனது உடல்நலனையும் மீறி சமந்தா எடுத்துள்ள ஒரு துணிச்சலான முடிவு சினிமா உலகத்தினரையும், ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது.