அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் வாத்தி. இப்படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாகிறது. தனுஷ் முதன்முதலாக நடித்துள்ள நேரடி தெலுங்கு படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இப்படத்தில் தனுஷ் மற்றும் சம்யுக்தா மேனன் இடம்பெற்றுள்ள போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் வருகிற நவம்பர் 10ம் தேதி வாத்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை தமிழில் தனுஷ் எழுத, தெலுங்கில் ராம ஜோகைய்யா சாஸ்திரி என்பவர் எழுதியிருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையில் இப்பாடலை ஸ்வேதா மோகன் பாடி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.