மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. தனது திறமையான நடிப்பால் எட்டமுடியாத உயரத்தை தொட்டு புகழ் உச்சியில் இருக்கிறார். ஆனால், அவருக்கே நமது தமிழ் சின்னத்திரை நடிகை தான் ஒரு படத்தில் டூப் போட்டுள்ளார். 'சூது கவ்வும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஞ்சலில் ராவ், தொடர்ந்து பல தமிழ் படங்களில் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார். அவ்வப்போது வெள்ளித்திரை கைக்கொடுக்காமல் போனால் சின்னத்திரை பக்கம் வந்துவிடுவார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களில் நடித்துள்ள அஞ்சலி ராவ், தென்னிந்திய சின்னத்திரை நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இந்த அஞ்சலி ராவ் தான் 'கோச்சடையான்' படத்தில் தீபிகா படுகோனேவுக்காக டூப் போட்டுள்ளார்.
மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் உருவான அந்த அனிமேஷன் படத்தில் தீபிகா படுகோனேவின் முகபாவங்களுக்காக அஞ்சலி ராவ் தான் டூப் போட்டு நடித்துக்கொடுத்துள்ளார். சமீபத்தில் கலர்ஸ் டிவியின் 'பச்சக்கிளி' தொடரின் மூலம் அஞ்சலி ராவ் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், இந்த தகவலானது தற்போது மீண்டும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.