ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தெலுங்கில் நானி நடிப்பில் 2018ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஜெர்சி. இந்த படம் பின்னர் ஹிந்தியில் கூட ரீமேக் செய்யப்பட்டது. இரண்டு மொழியிலுமே இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் கவுதம் தின்னனூரி. இதை தொடர்ந்து இவருக்கு ராம்சரண் நடிக்கும் அவரது 15வது படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் இந்த படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து தயாரிப்பு நிறுவனம் எதுவும் குறிப்பிடவில்லை. அதேசமயம் ராம்சரணின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அதே நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கூட இந்த படம் கைவிடப்பட போவதாக செய்திகள் வந்தபோது அப்போது அதை உறுதியாக மறுத்த ராம்சரண், “நான் கவுதமுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன். அவர் போன்ற ஒரு திறமையான இயக்குனருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறேன்.. மற்றவர்கள் சொல்வதுபோல இது ஸ்போர்ட்ஸ் படம் அல்ல.. ஆக்சன் படம்” என விளக்கம் சொல்லி அப்போது எழுந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தற்போது எந்த காரணமும் சொல்லப்படாமல் இந்தப்படம் கைவிடப்பட்டுள்ளது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.