நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா தனக்கு 'தசை அழற்சி' நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக நேற்று சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களாகவே ஓய்வில் இருந்த சமந்தா தனக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு குறித்து வெளிப்படையாக நேற்று அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் சமந்தா விரைவில் குணமடைய தங்களது பிரார்த்தனைகளையும், ஆதரவையும் பதிவிட்டிருந்தார்கள். அவர்களில் சமந்தாவின் முன்னாள் மைத்துனரும் ஒருவர். நடிகர் நாகார்ஜுனா , அமலா தம்பதியினரின் மகனும், நாகசைதன்யாவின் தம்பியுமான அகில் “டியர் சாம், உங்களுக்கு எனது அனைத்து அன்பும் வலிமையும்,” எனக் குறிப்பிட்டுள்ளார். அகிலின் இந்தப் பதிவுக்கு ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.
நாக சைதன்யாவைக் காதல் திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர் சமந்தா. இருவரது பிரிவுக்குப் பின் இரு குடும்பத்தாரும் சமூக வலைத்தளங்களில் கூட எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தார்கள். இந்நிலையில் தனது முன்னாள் அண்ணி சமந்தா குணமடைய அகில் வாழ்த்து சொல்லியிருப்பது தெலுங்குத் திரையுலகத்தினரையும் வியக்க வைத்துள்ளது.