நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது 61வது படமான 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன. போனி கபூர் தயாரித்துள்ள துணிவு படத்தை, பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். விஜய்யின் 'வாரிசு' படமும் பொங்கலுக்கு வெளியாகிறது.
'துணிவு' படத்திற்குப் பிறகு, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் 'ஏகே 62' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அஜித். இதற்கான முதற்கட்ட அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டது. இருப்பினும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், குழுவினர் மற்றும் தயாரிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
படத்தின் ஸ்கிரிப்டை விக்னேஷ் சிவன் முடித்துவிட்டதாகவும், படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் பிப்ரவரி 2023ல் தொடங்கும் என்றும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, நடிகை திரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஏகே 62' படத்தின் கதாநாயகியாக நடிக்க திரிஷாவை தயாரிப்பாளர்கள் அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தி உண்மையானால், 'ஜீ', 'கிரீடம்', 'மங்காத்தா', 'என்னை அறிந்தால்' ஆகியப் படங்களைத் தொடர்ந்து திரிஷா, அஜித்துடன் நடிக்கும் ஐந்தாவது படம் இதுவாகும்.