நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து, அந்த படத்தில் விஜய்சேதுபதி செய்யும் ஒரு காமெடி காட்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்ரி. ஆனால் அதைத்தொடர்ந்து அவருக்கு விஜய்சேதுபதியின் படங்களில் மட்டுமே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வந்தது. சில விழா மேடைகளில் கூட தமிழ் நடிகையான தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் ஒரு குறைபட்டுக் கொண்டதையும் காண முடிந்தது.
ஆனால் சூழல் அப்படியே மாறி தற்போது சினிமாவில் ஏறுமுகத்தில் இருக்கிறார் காயத்ரி. இந்த வருடம் அவர் நடித்த மாமனிதன் திரைப்படம் விமர்சனரீதியாக பாராட்டப்பட்டது.. பல சர்வதேச விருதுகளை வென்றது. கமல், பஹத் பாசில் விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மலையாளத்தில் குஞ்சாக்கோ போனுக்கு ஜோடியாக காயத்ரி நடித்த 'என்னா தான் கேஸ் கொடு' என்கிற படமும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வகையில் தற்போது தான் காயத்ரியின் மார்க்கெட் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
இந்த நிலையில் மலையாள சினிமாவின் பிரபல இயக்குனரான பிரியதர்ஷன், தான் அடுத்ததாக மலையாளத்தில் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக காயத்ரி தான் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் கதாநாயகர்களாக அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தும் இளம் நடிகர்கள் ஷேன் நிகம் மற்றும் ஷைன் டாம் சாக்கோ இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷனே தனது போர் பிரேம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்..