நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்கள், முக்கிய படங்கள் ஆகியவற்றை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்தான் வாங்கி வெளியிடுகிறது. 2023 பொங்கலுக்கு அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட உள்ளதாக சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
பொங்கலுக்கு விஜய் நடிக்கும் 'வாரிசு' படமும் வெளியாக உள்ளது. அப்படத்தை விஜய்யின் 'மாஸ்டர்' படத்தைத் தயாரித்த, விஜய்யின் 67வது படத்தைத் தயாரிக்க உள்ள செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி உள்ளது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஒரு படத்தை வெளியிடுகிறதென்றால் அதற்குப் போட்டியாக வேறொரு நடிகரின் படத்தை வெளியிடுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. தமிழகத்தில் உள்ள முக்கிய தியேட்டர்கள் கிடைப்பது அரிதானது.
பொதுவாக தமிழக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் அஜித்தின் படங்களை விட விஜய்யின் படங்களுக்குத்தான் எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகம் இருக்கும். இந்நிலையில் 'துணிவு' படத்திற்குப் போட்டியாக 'வாரிசு' படத்திற்கு அதிக தியேட்டர்களை எப்படி படத்தை வினியோகிப்பவர் வாங்கப் போகிறார் என்பதை திரையுலகில் யோசிக்க ஆரம்பித்திருப்பார்கள்.
இந்த விவகாரம் விரைவில் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.