நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண். 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன்பிறகு பல படங்களில் நடித்தாலும் 'பியார் பிரேமா காதல்' படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் தனக்கென ஒரு இடம் பிடித்தார். தொடர்ந்து தாராள பிரபு, இஸ்பேட்ட ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது டீசல் உள்ளிட்ட இரண்டு, மூன்று படங்களில் நடிக்கிறார்.
கடந்த ஆயுத பூஜை தினத்தில் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரையும் அறிமுகப்படுத்தினார். சென்னையில் பிறந்த நர்மதா தற்போது ஸ்டார்ட்-அப் தொழில் செய்து வருகிறார். பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த இவர்களது திருமணம் இன்று(அக்., 28) சென்னையில் ஜிபிஎன் பேலஸில் இந்து முறைப்படி இனிதே நடந்தது.

திருமணத்தின்போது மணமகன் ஹரிஷ் கல்யாண் பட்டு வேஷ்டி சட்டையும், மணமகள் நர்மதா சிவப்பு நிற பட்டுப்புடவையும் அணிந்து இருந்தனர். புதுவாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.