ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பவன் ராஜகோபாலன் இயக்கியிருக்கும் படம் 'விவேசினிக். இந்த படம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகி உள்ளது. பேயை தேடிச் செல்லும் ஒரு பெண்ணின் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் பவன் ராஜகோபாலன் கூறியதாவது: பிராகிருத மொழிச் சொல்லான விவேசினி என்றால் 'எதையும் அராய்ந்து பொருள் தேட விரும்பும் பெண் என்று பொருள். பேய்கள் உலவுவதால் பெண்கள் நுழைய தடை செய்யப்பட்டிருக்கும் காட்டுக்குள் சென்று உண்மைகளைக் கண்டறிய நினைக்கிறார் பகுத்தறிவு செயற்பாட்டாளர் ஜெயராமன். தவிர்க்க முடியாத காரணங்களால் அங்கு தன் மகள் சக்தியை அனுப்புகிறார். சக்திக்கு அங்கு திடுக்கிட வைக்கும் அமானுஷ்ய அனுபவங்கள் கிடைக்கின்றன. சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் அவள் நடுங்கியிருப்பாள். பகுத்தறிவாளரால் வளர்க்கப்பட்ட சக்தி கேள்விகள் எழுப்பி அவற்றுக்கான விடைகளைத் தேடி ஓடும் விவேசினியாக மாறுகிறாள். இதில், ஜெயராமனாக நாசர், சக்தியாக காவ்யா நடித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை தியேட்டர்களில் வெளியிடுகிறோம். என்கிறார் இ யக்குனர்.