மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
இந்தியாவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஏறத்தாழ அனைத்து மொழிகளிலுமே சூப்பர் ஹிட் அடித்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சிக்கு சாதாரண ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பினும், பலர் இதை உளவியல் ரீதியாக தவறு என்றும், மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஜோடியாக நுழைந்துள்ள இருவர் போர்வையை போத்திக் கொண்டு முத்தமிடும் காட்சி தற்போது வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முத்த சம்பவம் நடந்தது தமிழ் பிக்பாஸில் அல்ல தெலுங்கில். தமிழில் பிக்பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 6 கடந்த செப்டம்பர் மாதமே தொடங்கிவிட்டது.
தமிழைப் போலவே தெலுங்கிலும் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் 7 பேர் எவிக்ஷன் ஆகிவிட்டனர். தற்போது 14 நபர்களுடன் ஹவுஸ்மேட்டுகளுக்கு இடையே போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் ரோஹித் சாஹினி - மரினா ஆப்ரஹாம் கணவன் மனைவி என ஜோடியாக உள்ளே நுழைந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டின் படுக்கையறையில் வைத்து முதலில் வெளிப்படையாகவே கண்ணத்தில் முத்தமிடுகிறார்கள். அதன் பின் கேமராவை பார்த்து சுதாரித்துக் கொண்டு போர்வையை மூடி முத்தமிடுகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களின் இந்த செயலை கண்டிக்கும் அதேவேளையில் அதை காசுக்காக ஒளிபரப்பி வைரலாக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவையும் அதை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனாவையும் பலரும் கண்டித்து பதிவிட்டு வருகின்றனர். இப்போதே இப்படி என்றால் வருங்காலத்தில் படுக்கையறை காட்சியை கூட ஒளிபரப்புவீர்களா? இது மிகவும் அநாகரீகம் ஆபாசம் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.