ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தீபாவளி தினத்தை முன்னிட்டு விஜய் நடித்து வரும் 'வாரிசு' படம் பற்றிய அப்டேட் வரும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அது போலவே தீபாவளிக்காக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தினார்கள்.
வார இதழுக்கு படத்தின் இயக்குனர் வம்சி பைடிபள்ளி அளித்த பேட்டியில் சில புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. அவற்றைப் பார்த்ததும் தெலுங்கு படங்களை அதிகம் பார்க்கும் தமிழ் ரசிகர்களும் புதிய சந்தேகங்களை எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே, நரேஷ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'மகரிஷி' படத்திற்கும், வம்சி தற்போது இயக்கி வரும் விஜய்யின் 'வாரிசு' படத்திற்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக புகைப்பட ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
'மகரிஷி' படத்தின் ரீமேக் தான் 'வாரிசு' என்று இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இரண்டு படங்களின் கதாபாத்திரங்கள், நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் ஆகியவற்றை வைத்துப் பார்த்தால் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகமும் வருகிறது.

மகேஷ் பாபு கதாபாத்திரத்தில் விஜய், பூஜா ஹெக்டே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா, நரேஷ் கதாபாத்திரத்தில் ஷாம் ஆகிய முக்கிய கதாபாத்திர நடிகர்களும் மற்ற கதாபாத்திர நடிகர்களும் பொருந்திப் போகிறார்கள். 'மகரிஷி' திரைப்படத்தைத் தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் 'வாரிசு' படத்தையும் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகேஷ் பாபு நடித்து தெலுங்கில் வெளிவந்த 'ஒக்கடு' படம் விஜய் நடிக்க 'கில்லி' ஆகவும், மகேஷ் பாபு நடித்த 'போக்கிரி' படம் விஜய் நடிக்க 'போக்கிரி' ஆகவும் ரீமேக்காகி பெரும் வெற்றியை இங்கு பெற்றது. அது போல 'மகரிஷி' படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் சில பல மாற்றங்களைச் செய்து கூட ரீமேக் செய்திருக்க வாய்ப்புண்டு என்கிறார்கள்.