நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'தங்கலான்' என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
‛பொன்னியின் செல்வன்' படத்திற்கு பின் விக்ரமின் 61வது படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். நாயகிகளாக மாளவிகா மோகனன், பார்வதி நடிக்க முக்கிய வேடங்களில் பசுபதி, ஹரி கிருஷ்ணன் அன்பு துரை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை எஸ்.எஸ்.மூர்த்தி கையாள, படத்தொகுப்பு பணிகளை ஆர். கே. செல்வா கவனிக்க, சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைக்கிறார்.
கோலார் தங்க வயலைக் கதைக்களப் பின்னணியாகக் கொண்டு, ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜாவும், நீலம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் பா. ரஞ்சித்தும் இணைந்து தயாரிக்கிறார்கள். 'சீயான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு தற்போது 'தங்கலான்' என பெயரிடப்பட்டிருக்கிறது.
வசந்தபாலன் இயக்கத்தில் ஆதி, பசுபதி நடித்த ‛அரவான்' பட சாயலில் விக்ரமின் தோற்றம் மற்றும் படத்திற்கான பின்னணி காட்சிகள் இடம் பெற்றுள்ளன.