ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்- 6வது நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து உட்பட 20 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள். அதன் பிறகு முதல் வாரத்தில் 21வது போட்டியாளராக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி இரண்டாவது வாரம் போய்க்கொண்டிருந்தபோது ஜி.பி.முத்து தனது மகனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் மகனை பார்க்க வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இந்த நிலையில், ஜி.பி.முத்துக்கு பதிலாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப் போவது யார்? என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப் போவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இன்றோ அல்லது நாளையோ ஜி.பி. முத்துவுக்கு பதிலாக புதிய நபர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.