நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வரும் விஷால், ஆந்திரா மாநிலத்தில் உள்ள கடப்பாவில் அமைந்திருக்கும் அமீன் பீர் தர்காவிற்கு சென்று வழிபாடு நடத்தி இருக்கிறார். அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, ‛கடப்பாவிற்கு பலமுறை படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன். அப்போது எல்லாம் இந்த அமீன் பீர் தர்காவிற்கு வர வேண்டுமென்று நினைப்பேன். படப்பிடிப்பு காரணமாக வரமுடியாத சூழல் ஏற்பட்டது. என்றாலும் இப்போது இந்த தர்காவிற்கு வந்து பிரார்த்தனை செய்திருக்கிறேன்.
மேலும் என்னை பொறுத்தவரை அல்லாஹ், வெங்கடேஸ்வரா சாமி , இயேசு எல்லோரும் ஒன்று தான். மதம் என்ற ரீதியில் பிரிவினை கிடையாது. அனைத்து மத கடவுள்களையும் மதிக்கக் கூடியவன் நான்‛ என்று தெரிவித்திருக்கும் விஷால், ‛100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தால் அவர்கள் அரசியலுக்கு வந்து விட்டதாக அர்த்தம். அந்த வகையில் நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன்' என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் நடிகர் விஷால்.