நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சினிமாவில் வில்லன் உள்பட பலதரப்பட்ட வேடங்களில் நடித்தவர் பப்லு என்ற பிருத்விராஜ். பல சீரியல்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கும் நிலையில், அவரது மனைவிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது 56 வயதாகும் நடிகர் பப்லு ஒரு 23 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து சோசியல் மீடியாவில், 56 வயது நபர் 23 வயதை பெண்ணை திருமணம் செய்துள்ளாரா? என்று பலரும் இந்த செய்தியை பரபரப்பாக்கி வருகிறார்கள்.
தனது இரண்டாவது திருமணம் குறித்து பல்வேறு விவாதங்கள் ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் பப்லு அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், இது குறித்து என்னிடம் பலரும் கால் பண்ணி கேட்கிறார்கள். நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தது உண்மைதான். ஆனால் இன்னும் செய்து கொள்ளவில்லை. நான் எது செய்தாலும் வெளிப்படையாக செய்ய நினைப்பவன். அதனால் அனைவரது ஆசிர்வாதத்தோடுதான் இரண்டாவது திருமணம் செய்வேன். திருட்டுத்தனமாக செய்ய மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். அவரது இந்த விளக்கத்தின் மூலம் பப்லு இன்னும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. இனிமேல்தான் இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்பது தெரிய வந்துள்ளது.