நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மெட்ராஸ் ஸ்டுடியோஸ் அனுஷ் பிராபகர் தயாரித்துள்ள படம் 13. கே.விவேக் இயக்கி உள்ளார். ஜி.வி பிரகாஷ்குமார், கவுதம் வாசுதேவ் மேனன், ஆதித்யா கதிர், ஆத்யா பிரசாத், பவ்யா த்ரிகா மற்றும் ஐஸ்வர்யா உள்பட பலர் நடித்துள்ளனர். சித்து குமார் இசை அமைத்துள்ளார், மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கவுதம் மேனனுடன் ஜி.வி.பிரகாஷ் இணைந்திருக்கும் இரண்டாவது படம். இதில் கவுதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். 6 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட ஒரு சம்பவத்தை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. அடர்ந்த காடுகளிலும் படமாக்கி உள்ளனர். படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. செல்பி படத்திற்கு பிறகு மீண்டும் ஜி.வி.பிரகாசும், கவுதம் மேனனும் இதில் மோதுகிறார்கள்.