நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

2023ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடிக்கும் 'வாரிசு', அஜித் நடிக்கும் 'துணிவு' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இரண்டு படங்களும் எந்தெந்த தேதியில் வெளியாகும் என்பது குறித்து இதுவரையில் எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இதனிடையே, நாளை மறுநாள் தீபாவளி தினத்தில் 'வாரிசு' படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அன்றைய தினம் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்தும், படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு குறித்தும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் படத்தின் அப்டேட் வரும் போது தங்களது அபிமான நாயகன் அஜித் படத்தின் அப்டேட்டும் வர வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்போதுதான் சமூக வலைத்தளங்களில் இரண்டு ரசிகர்களும் ஏட்டிக்குப் போட்டியாக சண்டை போட முடியும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
2014ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடித்த 'வீரம்', விஜய் நடித்த 'ஜில்லா' படங்கள் நேரடியாகப் போட்டியிட்டன. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இருவரது படங்களும் மீண்டும் பொங்கலுக்குப் போட்டியிட உள்ளன.