நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் இயக்குனர்கள் தெலுங்குப் படங்களை இயக்கவும், தெலுங்கு இயக்குனர்கள் தமிழ்ப் படங்களை இயக்கவும் ஆசைப்பட்டு அவை அடுத்தடுத்து நடந்து வருகிறது. தமிழ் ரசிகர்களின் ரசனையும், தெலுங்கு ரசிகர்களின் ரசனையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. அவற்றை நன்றாகப் புரிந்தவர்களால் மட்டுமே திருப்தியான படங்களைக் கொடுக்க முடியும்.
சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளிவந்த 'ப்ரின்ஸ்' படத்தை தெலுங்கு இயக்குனரான கேவி அனுதீப் இயக்கியிருந்தார். தெலுங்கில் தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தமன் இசையமைத்துள்ளார். 'ப்ரின்ஸ்' படத்தின் பாடல்கள் யு டியுபில் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றிருந்தாலும் படத்துடன் அவற்றைப் பார்க்கும் போது ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. எனவே, விஜய் ரசிகர்களுக்கு 'வாரிசு' பாடல்கள் எப்படி இருக்கப் போகிறது என்ற சந்தேகம் இயல்பாக வந்துவிட்டது. 'வாரிசு படத்திற்கு தமன் தான் இசையமைக்கிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார்.
விஜய் படங்கள் என்றாலே அவற்றில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக அமைந்துவிடும். தீபாவளி நாளன்று 'வாரிசு' படத்தின் முதல் சிங்கள் வெளியாகும் என்ற தகவல் வந்துள்ளது. ஆனால், அன்று வெளியாவது சந்தேகம் என்றும் மற்றொரு தகவல் உண்டு. மாறாக, தீபாவளி அன்று 'வாரிசு' படத்தின் மிக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகும் என்கிறார்கள்.
விஜய் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆவல் தமனுக்கு எப்போதும் உண்டு. ஏற்கெனவே, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த படத்திற்கு தமன் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அந்தப் படம் அப்படியே நின்று போனது. உடனடியாகக் கிடைத்த அடுத்த வாய்ப்பால், விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இசையமைப்பாளர் தமன் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்ப்போம்.