நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலிவுட் நடிகர் வருண் தவான், கீர்த்தி சனோன் நடித்துள்ள படம் 'பெடியா'. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ஹாலிவுட்டில் ஓநாய் மனிதர்களை பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. ஓநாயால் கடிபட்ட ஒருவன் அந்த ஓநாயின் குணங்களைப் பெற்று வெறி கொண்டு திரிவான். அவனிடம் கடிபடும் அத்தனை பேரும் அதே போன்று ஆகிவிடுவார்கள். இதுதான் ஓநாய் மனிதர்களின் டெம்பிளேட் கதை. இந்த படத்திலும் அது மாதிரியான கதை தான். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள அடர்ந்து காடுளில் படமாக்கப்பட்டுள்ளது.
ஓநாய் மனிதனாக வருண் தவான் நடித்துள்ளார். அவருடன், கீர்த்தி, தீபக் தோப்ரியல் மற்றும் அபிஷேக் நடித்துள்ளனர். டாப் கன்: மேவ்ரிக், மோர்ட்டல் காம்பாட், காட்சிலா வெசஸ் காங், மற்றும் ஆட் அஸ்திரா ஆகிய படங்களுக்கு கிராபிக்ஸ் பணியாற்றிய எம்பிசி நிறுவனம் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளது.
படம் பற்றி இயக்குன் அமர் கவுசிக் கூறியதாவது : திரையரங்குளில் பார்த்து ரசிப்பதற்காக எடுக்கப்பட்ட படம் தான் பெடியா. இப்படம் ரசிகர்களை கட்டாயம் மகிழ்விக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. குறைந்த காலத்தில் உலகத்தரம் வாய்ந்த ஒரு படத்தை தருவதற்காக எடுத்து கொண்ட முயற்சியே பெடியா. தரமான கிராபிக்ஸ் காட்சிகளோடு உருவாகியுள்ள இப்படத்தை குடும்பத்துடன் கொண்டாட்டமாக ரசிக்கலாம். அனைத்து தலைமுறையினரையும் கவரும் ஒரு சினிமா அனுபவமாக இது இருக்கும். காமெடி மற்றும் திகில் நிறைந்த, இந்தியாவின் முதல் ஓநாய் மனிதனின் படமாக இது உருவாகியுள்ளது. என்றார்.