நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஜெயம் ரவி நடித்த ‛கோமாளி' படத்தை இயக்கியதன் மூலம் முதல் படத்திலேயே அறிமுக இயக்குனராக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளி விட்டு, அவர் அடுத்ததாக தானே ஹீரோவாக மாறி லவ்டுடே என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் நவம்பர் 4ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது, ஏற்கனவே நடிகர் விஜய்க்கு ஒரு கதை கூறியுள்ளதாக புதிய தகவலை வெளிப்படுத்தியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படம் வெளியான பின்னர் இயக்குனர் விஜய்யை சந்தித்து ஒரு கதையின் அவுட்லைனை கூறியதாகவும், அதன் மையக்கரு விஜய்யை கவர்ந்து விட்டதாகவும் கூறியுள்ள பிரதீப் ரங்கநாதன் எதிர்காலத்தில் விஜய்யை இயக்கும் வாய்ப்பு வந்தால் அதை நூறு சதவீதம் சரியாக பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.