நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நட்சத்திரம் நகர்கிறது படத்தைத் தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படத்தின் கதை கேஜிஎப் பாணியில் கோலார் தங்க வயல் பின்னணியில் நடைபெறும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை நடிகை பார்வதி ஒப்பந்தமாகியுள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பாவில் துவங்கி நடைபெற்று வருவதாகவும் இதில் கலந்துகொண்டு பார்வதி நடித்து வருகிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் படக்குழுவினர் இது பற்றி ஒரு சிறிய தகவலை கூட வெளியிடாமல் பாதுகாத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும், அதன்பிறகு இந்தப்படத்தின் படப்பிடிப்பு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டதால் இந்த படத்தில் பணியாற்ற இயலவில்லை என்று அவர் ஒதுங்கிக் கொண்டார் என்றும், அவருக்கு பதில் மாளவிகா மோகனன் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது..