மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பிக்பாஸ் சீசன் 6-ல் சீரியல் நடிகை ரக்ஷிதா மஹாலெட்சுமி கலந்து கொண்டுள்ளார். பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் ரக்ஷிதாவின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ரக்ஷிதாவின் சீரியல் கேரியரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. விஜய் டிவி சீரியலிலிருந்து திடீரென விலக்கப்பட்டார். தொடர்ந்து கலர்ஸ் தமிழில் அவர் நடித்து வந்த தொடர் ஹிட் அடித்த போதும் திடீரென நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தான் ரக்ஷிதா பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்துள்ளார். குடும்ப வாழ்வில் பிரச்னை காரணமாக தனியாக வாழ்ந்து வரும் ரக்ஷிதா முதன் முறையாக தன் திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பிக்பாஸ் வீட்டில் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் குயின்சி மற்றும் கதிருடன் பேசிய ரக்ஷிதா திருமணம் பற்றி பேசும்பொழுது, 'நம்ம அடுத்த ஜென்ரேஷன் எவ்ளோ கஷ்டப்படுவங்க. அவங்களுக்கு திருமணம் ஒரு கான்செப்ட்டே கிடையாது. நான் குடும்பம் குடும்பம்னு சொல்லியே எல்லாத்தையும் இழந்தேன். ஒரு பார்ட்டி கூட போகமாட்டேன். எல்லா பேரண்ட்ஸூம் தங்களோட குழந்தைன்னு பெண் குழந்தைகளுக்கு எல்லாத்தையும் கொடுத்து வளத்துட்றாங்க. ஆனா, மேரேஜ்க்கு அப்புறம் அவங்களுக்கு எதாச்சும் செய்யனும்னா அவர்ட்ட கேட்கனுமா? வேண்டாமான்னு யோசிக்க வேண்டியிருக்கு. அம்மா அப்பாவ வேறு பார்த்துக்குவா?. நாம தானே பாத்துக்கனும். ஆனால், சில கட்டுபாடுகளால அவங்களுக்கு எதுவுமே செய்யமுடியாம போய்டுது. நான் சம்பாதிக்கிறேன். நான் ஏன் என்னுடைய அப்பா அம்மாக்கு கொடுக்கக்கூடாதா?. அதை கேட்க நீ யார்ன்னு தோணும். நான் அந்த மாதிரியான நிலைமைய ரொம்ப மோசமாவே அனுபவிச்சிருக்கேன்' என்று கூறுகிறார்.
கணவரை பிரிந்த ரக்ஷிதா பிக்பாஸ் வீட்டில் தான் அதற்கான காரணத்தை முதல் முறையாக ஓப்பன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.