நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்று ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தை உலகம் முழுவதும் இன்னும் வெளியாகாத நாடுகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த விதத்தில் ஜப்பான் நாட்டில் இப்படம் நாளை அக்டோபர் 21ம் தேதி வெளியாகிறது. அங்கு படத்தைப் பிரபலப்படுத்த இயக்குனர் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் டோக்கியோ சென்றுள்ளனர். அங்கு ஜப்பானிய பத்திரிகையாளர்களைச் சந்தித்து படத்தைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் ஜப்பான் நாட்டில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது. அது போலவே இந்தப் படமும் வசூலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜப்பான் நாட்டில் இதுவரை வெளியான இந்தியத் திரைப்படங்களில் 1998ம் ஆண்டு அங்கு வெளியிடப்பட்ட தமிழ்ப் படமான ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம்தான் அதிக வசூலைக் குவித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து இரண்டாவது இடத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் உள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படம் அந்த இரண்டு படங்களின் வசூலை முறியடிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.