பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? |
தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒவ்வொரு முன்னணி ஹீரோக்களுக்கும் தங்களது படங்களின் டைட்டிலை தேர்ந்தெடுத்து வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அதிலும் ஒரு படம் ஹிட்டாகி விட்டால் அதே பாணியிலோ அல்லது அதே முதல் எழுத்தில் ஆரம்பிக்கும் விதமாகவோ பட டைட்டில் அமையுமாறு பார்த்துக் கொள்வார்கள்.
அந்த வகையில் நடிகர் அஜித், இயக்குனர் சிவாவுடன் இணைந்து பணியாற்றிய வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என நான்கு படங்களின் முதலெழுத்தும் வி என வருமாறு சென்டிமென்டாக டைட்டில் வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதேசமயம் சிவாவின் படங்களுக்கு மட்டுமே அப்படி சென்டிமென்டை கடைபிடித்த அஜித் மற்ற இயக்குனர்களின் படங்களில் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
இதேபோல மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜும் தற்போது தனது படங்களில் டைட்டிலில் முதல் எழுத்து ஒரேபோல இருக்கும் விதமாக ஒரு சென்டிமெண்ட் கடைபிடித்து வருகிறார் என்றே தோன்றுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் அவர் நடித்த கடுவா திரைப்படம் வெளியானது. அடுத்ததாக மீண்டும் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காப்பா என்கிற படம் வெளியாக இருக்கிறது.
இதுதவிர ஏற்கனவே காளியன் என்கிற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளார் பிரித்விராஜ். தற்போது புதிய அறிவிப்பாக புலிமுருகன் இயக்குனர் வைசாக் டைரக்ஷனில் கலிபா என்கிற படத்தில் பிரித்விராஜ் நடிக்க இருக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் தனது படங்களின் முதல் எழுத்து க அல்லது கா என ஆரம்பிக்கும் விதமாக ஒரு சென்டிமென்ட்டை பிரித்திவிராஜ் கடைபிடிக்கிறாறோ என்றே நினைக்க தோன்றுகிறது.