டூரிஸ்ட் பேமிலி படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனம் | குட் பேட் அக்லி ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? | யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! |
சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். 'ஜாதி ரத்னலு' தெலுங்கு படத்தை இயக்கிய அனுதீப் இயக்கி இருக்கிறார். உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21ம் தேதி வெளிவருகிறது. இது தொடர்பாக சிவகார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: வன்முறையோ, வில்லனோ இல்லாமல் ரொம்ப ஜாலியாக உருவாகி உள்ள படம் பிரின்ஸ். இரண்டரை மணி நேரம் மக்களை சந்தோஷப்படுத்தணும் என்பதை மட்டுமே மனதில் கொண்டு படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதை ஒரு புதிய முயற்சின்னும் சொல்லலாம். ஒரு வெளிநாட்டு பெண்ணை தமிழ் பையன் காதலிக்கிறது தான் படம். காமெடி பண்றது ரொம்ப கஷ்டமான விஷயம். அதை சவாலா ஏத்துக்கிட்டு பண்ணியிருக்கோம்.
இது பக்கா தமிழ் படம் தான், தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறோம். மற்றபடி இரு மொழிகளில் தயாராகவில்லை. இயக்குனர் தெலுங்கு என்பதால் அப்படியான ஒரு தகவல் பரவி இருப்பதாக நினைக்கிறேன். ஹீரோயின் கதைப்படி வெளிநாட்டு பெண் என்பதால் மரியாவை நடிக்க வைத்திருக்கிறோம். இருவருமே ஆசிரியர்களாக நடித்திருக்கிறோம். இன்றைக்கு முக்கிய தேவை மனிதாபிமானம் அதை இந்த படம் வலியுறுத்துகிறது.
எனது படங்கள் தயாரிப்பாளருக்கு தியேட்டரில் வெளிவருதற்கு முன்பே லாபத்தை கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த படமும் அப்படித்தான் ஆனால் எவ்வளவு லாபம் என்று தெரியாது. அடுத்து மாவீரன் படம் வெளியாகும், அயலான் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. அடுத்து கமல் சார் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.