நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தோற்றுவித்தவர் கே.பி.ஹெட்கேவர். இவரது வாழ்க்கை இப்போது சினிமாவாக தயாரிக்கப்படுகிறது. சஞ்சய்ராஜ் கவுரிநந்தன் இயக்கும் இப்படத்தில் தேசிய விருது பெற்ற அனுப் ஜலோட்டா நடிக்கிறார். அவருடன், ஜஸ்வீர் சிங், ராகுல் ஜோஷி, எல்.நித்தேஷ் குமார் மற்றும் ஜெயானந்த் ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
"எங்கள் திரைப்படம் ஹெட்கேவரின் வாழ்க்கை பயணம், அவரது போராட்டங்கள் மற்றும் அவரது இயக்கங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமையும். ஆர்எஸ்எஸ் இன்று உலகின் மிகப்பெரிய சமூக அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் அது கடுமையான பாதைகளை கடந்து வந்துள்ளது. அதனை பற்றி இந்த படம் பேசும்” என்கிறார் இயக்குனர் சஞ்சய்ராஜ்.